Posts

இன்றைய ராசிபலன்

Today Rasi Palan  இன்றைய பஞ்சாங்கம் 19-10-2019, ஐப்பசி 02, சனிக்கிழமை, பஞ்சமி திதி காலை 07.44 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 05.40 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் – மதியம் 01.30-03.00, குளிகன் -காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. மேஷம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். ரிஷபம் இன்று கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். நெருங்கிவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் தாமதமின்றி கிடைக்கும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன் பொருள் சேரும். மிதுனம் இன்று குடும்பத்தில...

தமிழ் புத்தாண்டுப் பலன்கள்

தமிழ் வருட நட்சத்திர பலன்கள்

தமிழ்வருட நட்சத்திர பலன்கள் அசுவினி 14.04.2019 முதல் 13.04.2020 வரை கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் ஒன்பதாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது. பலன்: குடும்பத்தில் சந்தோஷத்தைப் பெறப்போகும் அசுவினி நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் சுபச் செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதைத்  தவிர்த்து அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும் போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக  வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்குப் பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும்  இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தைக் கா...

குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 (29.10.2019 முதல் 14.11.2020 வரை) ஆண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடிய குரு பெயர்ச்சி இந்த வருடம் 29.10.2019 அன்று நிகழ்கிறது. விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12ம் நாள் செவ்வாய்க்கிழமை, வாக்கிய பஞ்சாங்கப்படி, விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுதலாகி செல்கிறார். குரு பகவான் தனுசு ராசியில் 14.11.2020 வரை சஞ்சாரம் செல்கிறார். குரு பார்க்க கோடி நன்மை என்றும், கோடி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது. குரு பெயர்ச்சியினால் நன்மைகள் நடக்கும் என்று பொதுவாக நம்பலாம், எதிர்பார்க்கலாம். ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி, லக்னம் ஆகியவை பொருத்தும், ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோச்சாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார், அதுவே நடக்கும். தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குரு பகவானால் நன்மையே நடக்கும். திருமணம், புத்திர பாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வழிபடுவது எல்லா வகையிலும் நன்மை தரும். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து அட...

சனிப் பெயர்ச்சி பலன்கள்

சனிப் பெயர்ச்சி பலன்கள் மேஷம் கடந்த மூன்று ஆண்டுகளாக ‘அஷ்டமத்துச் சனியின்’ பிடியில் சிரமத்தினை அனுபவித்து வந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகுந்த நன்மையைத் தரும். கஷ்டத்தினைத் தரும் எட்டாம் இடத்திலிருந்து விலகி ஒன்பதாம் இடத்திற்குள் நுழையும் சனி இத்தனை நாட்களாக தந்த சிரமத்திற்கு மாற்றாக நற்பலனைத் தரத் துவங்குவார். தொழில்முறையில் இதுநாள் வரை சந்தித்த தடைகள் விலகும். எதிர்கால சந்ததியினருக்காக சொத்துக்களை உருவாக்கும் முயற்சியில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். அமைதியான முறையில் அதிக ஆர்ப்பாட்டம் இன்றி பொருள் சேமிப்பில் ஈடுபடுவது நன்மை தரும். கடன்பட்டாவது அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது நல்லது. சொத்துக்களை விருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஸ்திரமாகப் பதியும். பொதுவாக ஒன்பதாம் இடத்துச் சனி தனலாபக் குறைவு, எதிரிகள் வலுப்பெறுதல், அடுத்தவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலை ஆகியவற்றை பலன்களாகத் தருவார் என்று சொல்வார்கள். இதற்கு சனி பகவானின் பார்வை நிலையே காரணமாக அமைகிறது. சத்ரு ஸ்தானம் ஆகிய 6ம் இடத்தையும், 11ம் இடமாகிய லாப ஸ்தானத்தையும், 3ம் இடம் ஆகிய தைரிய ஸ்தானத்...