குரு பெயர்ச்சி பலன்கள்


குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020
(29.10.2019 முதல் 14.11.2020 வரை)

ஆண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடிய குரு பெயர்ச்சி இந்த வருடம் 29.10.2019 அன்று நிகழ்கிறது. விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12ம் நாள் செவ்வாய்க்கிழமை, வாக்கிய பஞ்சாங்கப்படி, விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுதலாகி செல்கிறார். குரு பகவான் தனுசு ராசியில் 14.11.2020 வரை சஞ்சாரம் செல்கிறார்.

குரு பார்க்க கோடி நன்மை என்றும், கோடி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது. குரு பெயர்ச்சியினால் நன்மைகள் நடக்கும் என்று பொதுவாக நம்பலாம், எதிர்பார்க்கலாம்.

ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி, லக்னம் ஆகியவை பொருத்தும், ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோச்சாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார், அதுவே நடக்கும். தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குரு பகவானால் நன்மையே நடக்கும். திருமணம், புத்திர பாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வழிபடுவது எல்லா வகையிலும் நன்மை தரும்.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதற்கு 13 மாதங்கள் அல்லது ஒரு வருடம் ஆகும். இப்படி ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதையே குரு பெயர்ச்சி என்கிறோம்.


பலன்பெறும் ராசிகள்
மேஷம், மிதுனம், சிம்மம்,

சமபலன் பெரும் ராசிகள்:
கும்பம், விருச்சிகம்

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்:
ரிஷபம், கடகம்,

குரு பரிகாரம்:

ஒவ்வொரு ராசிக்காரரும் வியாழக்கிழமைகளில், தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரக குருவையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு நலம் பெறலாம்.


மேஷம்

மேஷ ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 8ல் இருந்து வந்த குருபகவான் 29-10-2019 முதல் 9-ம் இடத்திற்கு செல்கிறார். 9-ம் இடமான தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் உங்களுக்கு பல ஏற்றங்களை வழங்க போகிறார்.
உங்கள் ராசியை குரு பார்ப்பதால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சில காரியங்களில் அவசரமாக செயல்பட தோன்றும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான தீர்வு காண முடியும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உடல் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல் பட முடியும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். குல தெய்வ வழிபாடு குலத்தை காக்கும். தெய்வத்தின் அருளால் எல்லா காரியத்திலும் எளிதில் வெற்றி பெற கிடைக்கும். குடும்ப வருமானம் தானாக உயரும்.
குடும்பத்தில் குதூகலம் உண்டு. குடும்பத்தாரின் அரவணைப்பை பெற முடியும். விலகி நின்ற சொந்தங்கள் மீண்டும் வந்து இணைவர். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமணம் உறவினர்களின் ஒத்துழைப்பால் கைகூடி வரும். கையில் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் உங்கள் யோசனைகள் ஏற்கப்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாற்றங்கள் ஏற்றங்களை தரும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். உங்கள் ஆற்றலையும், திறமையும் கண்டு மற்றவர்கள் வியப்படைவர். உறவினர்கள் சிலர் உங்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பர். தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு. பேச்சில் கனிவு பிறக்கும். முடியாத காரியங்களை கூட எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். பூர்விக சொத்து பிரச்சனைக்கு தீர்க்க கிடைக்கும். சொந்த வீடு கனவு நினைவாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவிக்கிடையில் அன்யோன்யம் ஏற்படும். நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதம் மறையும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் பயணம் செல்ல விருப்பம் ஏற்படும். உத்யோகத்தில் பெயர், புகழ் கிடைக்கும். தொழில், வியாபாரம் நிதானமாக நடக்கும். இந்த குரு பெயர்ச்சியில் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் குருவால் அபரிதமான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்



ரிஷப ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்த குருபகவான் 29.10.2019 முதல் 8-ம் இடத்திற்கு செல்கிறார். (8-மிட குரு சற்று சிக்கல் தான்.) அஷ்டமத்தில் குரு இருந்தால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும், இருப்பினும் குருவின் பார்வை உங்கள் ராசியின் முக்கிய இடத்திற்கு கிடைப்பதால் பல நன்மைகள் நடக்கும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அடுத்தவருக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். விருந்து விழா, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியை சிறிய தடங்கலுக்கு பின் நிறைவேற்ற முடியும். பணம் நிமித்தமாக அலைச்சல் இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். எதிர்பாராத வகையில் பண விரையம் ஏற்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம், கவனமுடன் இருக்கவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அறிவுப்பூர்வமாக சிந்தித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிவரும். பழைய கடன்களை நினைத்து அவ்வப்போது கலக்கம் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சலும், டென்ஷனும் ஏற்படும். சொத்து வழக்குகளில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். வேண்டாதவர்களிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. எல்லாவற்றிக்கும் மேலாக உங்கள் எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளவும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்காமல் போகலாம். வாகன வசதிகள் பெருகும். புது வீட்டிற்கு குடியேற முடியும். வேற்று மதத்தினரின் உதவியும் ஆதரவும், கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும் தொழில், வியாபாரத்தில் மெத்தனமான போக்கு காணப்படும். இந்த குரு பெயர்ச்சியில் ஆரம்பத்தில் நிறைய தடைகளை சந்தித்தாலும் நாளடைவில் நல்லது நடக்க ஆரம்பிக்கும் என்பது உன்மை



மிதுன ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 6-ஆம் இடத்தில் இருந்த குருபகவான் 29-10-2019 முதல் 7-ம் வீட்டிற்கு செல்கிறார். 7-ம் வீடு குருவிற்கு சிறப்பு வாய்ந்த இடம். கடந்த ஒரு வருட காலமாக சிரமத்தினை சந்தித்து வந்த உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி மன நிம்மதியை தரும். 6-ம் இடத்தில் இருந்து ஏழாம் இடத்திற்கு வரும் குருபகவான் தனது நேரடி பார்வையை உங்கள் ராசியின் (மிதுனம் மீது செலுத்துவதால் குரு பலத்தினை அடைகிறீர்கள்.) புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் பெரியளவில் வெற்றி பெறுவீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பயணத்தின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீடு, வாகனம்,வாங்கும் எண்ணம் மேலோங்கும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவி செய்வார். குடும்பத்தில் உறவினர்கள் வருகை இருக்கும். அனுபவபூர்வமான அறிவு திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும். குடும்பத்தில் வசதிகள் பெருகும். உங்கள் மதிப்பும், மரியாதையும் வெகுவாக உயரும். திருமண காரியம் விரைவில் கைகூடும். தடைப்பட்ட பல சுப காரியம் இனிதே நடைபெறும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவர். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். பொருளாதார உயர்வு இருக்கும், மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும். உங்களுடைய திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். தடைப்பட்ட காரியங்களையெல்லாம் விரைந்து முடிக்க முடியும். வெளியில் கொடுத்த கடன் கைக்கு திரும்ப வரும். பணவரவும் அதிகரிக்கும். குல தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். இழுபறியில் இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் சிறப்பான பலனை தரும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். குரு பகவானின் பார்வை பலம் அடுத்த ஒரு வருடத்திற்கு உங்கள் ராசியின் மேல் விழுவதால் நற்பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.



கடக ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்த குரு பகவான் 29-10-2019 முதல் 6-ம் வீட்டிற்கு செல்கிறார். (6-ம் இடம் மறைவு ஸ்தானம்) 6-ம் இடத்து குரு காரியங்களில் தடங்களை ஏற்படுத்தும். 6-ல் குரு அமருவது சிரமம் என்றாலும் அவரது சிறப்பு பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் பொருளாதார நிலையில் பிரச்சனை ஏதுமின்றி தன வரவு என்பது தொடர்ந்து கொண்டிருக்கும். ஆன்மீக பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். திட்டமிட்டு செய்யலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் சிறு சிறு சண்டைகள் உண்டாகலாம். பயணங்கள் சாதகமான பலன் தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். சுப காரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனை சரியாகும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக பட்ட கஷ்டங்கள் மறைந்து ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பணம் அதிகமாக வந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். விட்டில் திருமண பேச்சு தொடங்கும். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்களால் மனக்கவலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். புதிய கடனை மேற்கொண்டு வாங்காமல் இருப்பது நல்லது. புதியவர்களை நம்பி எந்த முடிவையும் எடுக்கவேண்டாம். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதையும் கூடும். பண வரவு அதிகரிப்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வண்டி, வாகனத்தை சீர் செய்வீர்கள். மறைமுக எதிரிகளின் தொல்லை இருக்கும், இருப்பினும் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்கவும். ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளவும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை தீரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு. உத்யோகத்தில் அலுவலுக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். தொழில், வியாபாரம் நன்றாகவே நடக்கும். தொழில், வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இந்த குருப்பெயர்ச்சி நிறைய செலவுகளையும், வீண் அலைச்சல்களையும் தந்தாலும் வெற்றி பெறுவது உறுதி.



சிம்ம ராசி நேயர்களே, இது வரை 4-ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் 29-10-2019 முதல் 5-ம் இடத்திற்கு செல்கிறார். 5-ம் இடம் என்பது குருவிற்கு சிறப்பான ஒரு இடம். 5-மிடம் குருவால் இந்த வருடம் நிறைய நன்மைகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம். புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். காரிய தடை நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் வரும். மனதில் தோன்றும் புதுமையான எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி பெற முடியும். உங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற எல்லா வகையான நன்மைகளும் கிடைக்கும். உடலிலும் மனதிலும் புது தெம்பு பிறக்கும். எங்கும் எப்போதும் உற்சாகமாக இருக்க முடியும். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். சிலருக்கு சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புது வண்டி, வாகனம் வாங்க முடியும். திருமண காரியம் கைகூடும். சுப செலவுகள் கூடுதலாகும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பழைய சொந்த பந்தங்கள் உங்களை தேடி வருவர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உங்களை எதிர்த்து நின்றவர்கள் விலகி நிற்பர். வெளியூர் பயணங்கள் மனதுக்கு திருப்தி தரும். குடும்ப பெரியோர்களின் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தேவையற்ற மருத்துவ செலவுகள் வரும். பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற மனக்குழப்பமும், சஞ்சலமும் உங்கள் மனதிற்கு சங்கடங்களை ஏற்படுத்தும். இறைவழிபட்டால் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கையும் ஒரு சிலருக்கு அமையும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும் மீண்டும் வந்து பேசுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். உத்யோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய ஆலோசனை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். இந்த குருபெயர்ச்சியில் பல நன்மைகளும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களும் ஏற்படும்.


கன்னி ராசி நேயர்களே, இது வரை 3-ம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் 29-10-2019 முதல் 4-ம் இடத்திற்கு செல்கிறார். 4-ம் இடத்தில் அமரும் குரு சுமாரான பலன்களை தான் தருவார் என்பதால் கெடுதல் ஏதும் சிம்ம ராசிக்கு இல்லை. 4-மிடம் குருவால் பெரிய நன்மைகள் ஏதும் இல்லாவிட்டாலும் பிரச்சனைகள் ஏதும் வராது. நெருக்கடியான பிரச்சனைகள் நீங்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை தீரும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிடையே நெருக்கும் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். கணவன் மனைவிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாலித்தினருடன் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய நபர்களிடம் பழகும் போது எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வடைய துவங்கும். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆராய்ந்து செயல்படும் திறன் ஓங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். வண்டி, வாகனங்களை புதிதாக வாங்க முடியும். நல்லவர்களின் நட்பை வளர்த்துக்கொள்வீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். காதல், திருமண விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். கடன் வாங்கவோ,கொடுக்கவோ வேண்டாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாமல் ஆலோசனை செய்து முடிவு செய்யவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தேவையற்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் சுப காரியங்கள் சிறிது தாமதத்திற்கு பிறகு நல்ல படியாக நடைபெறும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிடையே சண்டை, சச்சரவு வராமல் பார்த்துக்கொள்ளவும். சிலருக்கு வீடு மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். உத்யோகத்தில் இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கவும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி விட முயற்சியின் பேரில் வெற்றி பெரும் வகையில் அமையும்.



துலாம் ராசி நேயர்களே, இது வரை 2-ம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் 29-10-2019 முதல் 3-ம் இடத்திற்கு செல்கிறார். குரு 3-ம் இடத்திற்கு வருவது சிறப்பு இல்லை என்றாலும் குருவின் பார்வை பலமான இடங்களில் விழுவதால் நிச்சயமாக பெரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் தள்ளி போகலாம். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் ஒன்று நடக்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். எடுத்துக்கொண்ட காரியங்கள் சாதகமாக முடியும். ஆன்மீக பணிகளில் நாட்டம் கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கடின முயற்சிக்கு பின்பே கிடைக்கும். வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. எல்லா காரியத்திலும் துணிச்சலுடன் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெருவீர்கள். மனம் யோகா, தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் சிறப்பாக அமையும். கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் இருந்தால் சரியாகி விடும். குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். அடுத்தவருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பண வரவு சற்று சுமாரான நிலையில் தான் இருக்கும் என்பதால் செலவுகளை குறைக்க வேண்டியது அவசியம். எதிர்பாராத விதமாக நிறைய அலைச்சல்களை சந்திக்க நேரிடும். உங்கள் முயற்சிகளில் ஒரு சில தடங்கல் ஏற்பட்டாலும் விட முயற்சியால் அதில் வெற்றி பெற முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி கரமாக இருக்கும். பிரிந்து இருந்த தம்பதினர் மீண்டும் ஒன்று சேருவார்கள். வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட சரிவுகளில் இருந்து மீள முடியும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை அதிகரிக்கும். பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் ஏற்படுவதால் பணப் பற்றாக்குறை நீடிக்கவே செய்யும். முக்கியமான விஷயங்களில் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். முக்கிய வேலைகளை நீங்களே நேரிடையாக செய்வது முடிப்பது நல்லது. உத்யோகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். பொதுவாக பார்க்கும் போது குரு பெயர்ச்சி பலன் தரவில்லை என்றாலும் மற்ற கிரகநிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் கவலை வேண்டாம்.



விருச்சிக ராசி நேயர்களே, இது வரை உங்கள் ஜென்ம ராசியில் இருந்து வந்த குரு பகவான் 29-10-2019 முதல் 2-ம் இடத்திற்கு செல்கிறார். 2-ம் இடம் இடத்தில் குரு பகவானின் செயல்பாடு மிகுந்த நற்பலனை தரும். அடுத்த ஒரு வருடம் காலத்தில் தடையில்லாத தன வரவு காரணமாக பொருளாதார நிலை உச்ச கட்டத்தை எட்டும். பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து போகவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். சின்ன விஷயங்கள் கூட மனநிறைவு தரும்படி நடக்கும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். மன தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். புதிய நண்பர்கள் அறிமுகவார்கள். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பல வகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். உறவினர்களுடன் மனம் திறந்து பேசுவீர்கள். எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன் தரும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். திருமண வயதிலுள்ள அன்பர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் பொறுப்புகளும், கடமைகளும் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும், வாக்கு வன்மை கூடும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். மனதில் உற்சாகம் ஏற்படும். தெய்வ பலம் கூடும். பண தட்டுப்பாடு குறைந்து, இடையூறுகள் ஓரளவு சீராகும். புதிய பாதையில் பயணிக்க விரும்புவீர்கள். கடன் தொந்தரவு ஓரளவு சீராகும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலவும். பழைய நேர்த்தி கடனை நிறைவேற்ற முடியும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புண்டு. வண்டி, வாகனத்தை சீர் செய்வீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புதிய ஆடை, ஆபர்ண பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமுடன் பழகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். இந்த குரு பெயர்ச்சி மூலம் எல்லாம் நன்மைகளையும் பெற முடியும் என்று உறுதியாக கூறலாம்.


தனுசு ராசி நேயர்களே, இது வரை 12-ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் 29-10-2019 முதல் உங்கள் ஜென்ம ராசிக்கு செல்கிறார். ஜென்ம ராசியை குரு கடக்க போகும் குரு ஒரு வருட காலம் சிறப்பாக இருக்கும். இந்த குரு பெயர்ச்சியால் எந்த ஒரு விஷயமும் நீண்ட இழுபறிக்கு பின்னரே உங்களுக்கு சாதகமாக நடக்கும். குடும்பத்தில் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். குடும்ப சூழ்நிலை மனதிற்கு நிம்மதி தரும். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் செலவுகள் படிப்படியாக குறையும். பொருளாதார ரீதியாக மிக பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். மறைமுக வழியில் தன லாபங்கள் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சொந்த பந்தங்களால் ஒரு சிலருக்கு டென்ஷன் ஏற்படும். உறவினர்களிடம் தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும். வண்டி, வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். கணவன் மனைவி உறவு வலுப்பெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். உறவினர், நண்பர்களால் அன்பு தொல்லை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பூர்விக சொத்து வகையில் ஒரு சில பிரச்சனைகள் வாய்ப்புண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். குல தெய்வ வழிபாடு மூலம் சிறப்பான பலனை பெற முடியும். கூடுமானவரை உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். புதிய திட்டங்களில் பொறுமையும், நிதானமும் தேவை. உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். இந்த குரு பெயர்ச்சியில் ஜென்ம குரு சுமாரான பலன்கள் தந்தாலும் கெடுதல் எதையும் குரு பகவான் செய்ய மாட்டார்.


மகர ராசி நேயர்களே, இது வரை 11-ம் வீட்டில் இருந்த குரு பகவான் 29-10-2019 முதல் 12-ம் வீட்டிற்கு செல்கிறார். (12மிடம் மறைவு ஸ்தானம்) 12-ம் இடம் மறைவு ஸ்தானம் என்பதால் தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். ஆகையால் அடுத்த ஒரு வருட காலம் கவனமாக இருப்பது நல்லது. புது விஷயங்கள் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். குடும்பத்தில் எதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம், அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். பண விஷயத்தில் கூடுமானவரை யாரையும் நம்ப வேண்டாம். குடும்ப பெரியோர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டிருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகி வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவர். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நல்லபடியாக அனைத்து விஷயங்களையும் முடித்து கொடுப்பீர்கள். பண வரவுக்கு பஞ்சமில்லை அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். குடும்பத்தினருடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். ஆன்மீக சார்ந்த விஷயங்களுக்கு அதிகம் செலவு செய்ய நேரிடும். நீண்டதொரு ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கலாம். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். ஓயாத அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறுவீர்கள். புது வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரும். எதிர்பார்த்த காரியம் தடையின்றி முடியும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். பழைய கடன்களால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வர வேண்டிய பெரிய தொகை கைக்கு வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்ளுவதால் பண விரையம் ஏற்படும். பால்ய நண்பர்களுடன் சிறிய மனஸ்தாபம் வரும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டி வரும். உத்யோகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். கூட்டு தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. இந்த குரு பெயர்ச்சியில் பலன் மிகவும் குறைவாக கிடைப்பதால் பொறுமையை கடைப்பிடிக்கவும்.


கும்ப ராசி நேயர்களே, இதுவரை இருந்து 10-ம் இடத்தில் இருந்து வந்த 29-10-2019 முதல் 11-ம் இடத்திற்கு செல்கிறார். (11-ம் இடம் என்பது லாப ஸ்தானம்) 11-ம் இடத்தில் குரு அமர்வது மிகவும் விசேஷமான பலனை தரும். குரு பகவான் 11-ம் இடத்திற்கு வருவது பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். உங்கள் அறிவு திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். மற்றவர்கள் செய்கையால் கோபம் ஏற்படலாம். பூர்விக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும். வெளியூரிலிந்து நல்ல தகவல்கள் வரும். கணவன் மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைக்கவும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்கை தரம் உயர ஆரம்பிக்கும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். குடும்ப நலனில் அக்கறைகொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். பொருளாதார விஷயத்தில் முழு கவனம் செலுத்தவும். வெளியிடங்களில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உடன்பிறந்தோர் உற்ற துணையாக இருப்பர். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் எப்பொழுதுமே சந்தோஷம் நிலைத்து இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அனுகூமுறையால் தீர்வு கிடைக்கும். விலகி நின்ற நண்பர்கள் மீண்டும் வந்து நட்பு பாராட்டுவர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அனாவசிய செலவுகளை குறைத்து பணத்தை சேமிக்க முடியும். உடன்பிறந்தவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். உடல் நிலையும், மனநிலையும் மிகவும் தெளிவாகவும், உற்சாகத்துடன் இருக்கும். உங்களுடைய எண்ணங்கள், திட்டங்கள், ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடும். புதிதாக திருமண ஆனவர்களுக்கு சீக்கிரத்தில் புத்திர பாக்கியம் கிட்டும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கலில் நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்கள் கடுமையான முயற்சியால் பல வெற்றிகளையும், சாதனைகளையும் படைக்க முடியும். எதிரிகளின் இடையூறுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உத்யோக தொடர்பாக நிறைய அலைய வேண்டியிருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால் காரிய வெற்றி பெறுவர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் பற்றிய யோசனை வரும். இந்த குரு பெயர்ச்சியில் நல்லது, கெட்டதும் கலந்து நடப்பதால், சுமாரான பலன்களே எதிர்பார்க்கலாம்.


மீன ராசி நேயர்களே, இது வரை 9-ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் 29-10-2019 முதல் 10-ம் இடத்திற்கு செல்கிறார். பொதுவாக 10-இடத்து குரு நன்மை செய்ய மாட்டார் என்பது ஒரு பொதுவான கருத்து. இருப்பினும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு நடக்க வேண்டிய பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். பொருளாதாரத்தில் கணிசமான வளர்ச்சி ஏற்படும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. புது பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாலத்தினரிடம் கவனமாக பழகுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம். கணவன் மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். சொந்த வீடு அமையும் யோகம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் ஒன்றை வாங்குவீர்கள். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். மேலும் கொடுத்த கடனை திரும்ப பெறுவது கடினம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். முக்கிய வேலைகளை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் கவனம் தேவை. விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். உற்றார், உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். உடல் நலம் சீராகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு உள்ளவர்களாக திகழ முடியும். வருமானம் பல வழிகளில் வந்து சேரும். வரும் எதிர்ப்புகள் தானாக விலகும். புது வீடு மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த மன நிம்மதி கிடைக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு நீங்கும். குல தெய்வ வழிபாடு தாமதன்றி நிறைவேற்ற முடியும். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது பெரியோர் அறிவுரை கேட்டு நடப்பது அவசியமாகிறது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உத்யோகத்தில் சாதுரியமான பேச்சு மூலம் நிறைய சாதிக்க முடியும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வரும். தொழில், வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். மீன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியுடன் மற்ற கிரக சஞ்சாரத்தையும் வைத்து பார்க்கும் போது நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.


Comments