வார ராசிபலன்

வார ராசிபலன்

மேஷம்
31.8.2019 முதல் 6.9.2019 வரை
ராசி நாதன் செவ்வாயின் பார்வை காரணமாக புதிய எண்ணங்கள் திட்டங்கள் மனதில் தோன்றும். சுய தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு சாதகமான நிலை இருக்கும். எதிர்ப்புகள் குறையும். சூரியன் ஆட்சியாக இருப்பதால் குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். நல்ல சம்பளத்தில் புதிய வேலையில் சேரும் யோகம் உள்ளது. சகோதர உறவுகளிடையே இருந்து வந்த மனக் கசப்புக்கள் நீங்கும், மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். 5, 6 தேதிகளில் அவசர பயணங்கள் இருக்கும். வயிற்று உபாதைகள் வரவாய்ப்புள்ளது.

சந்திராஷ்டமம் : 5.9.2019  அதிகாலை 5.02 முதல் 7.9.2019 காலை 10.49 வரை.
பரிகாரம் : சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ப்ரத்யங்கிரா தேவியை தரிசிக்கலாம். மனக்குழப்பம், கண் திருஷ்டி நீங்கும். பக்தர்களுக்கு பழவகைகளை பிரசாதமாக தரலாம்.

...................................................................................


ரிஷபம்
31.8.2019 முதல் 6.9.2019 வரை
சூரியன் சுக ஸ்தானத்தில் ஆட்சியாக இருப்பதால் உடல் நலம், மனநலம் நன்றாக இருக்கும். உத்யோகத்தில் உங்கள் எதிர் பார்ப்புகள் நிறைவேறும். உயர் அதிகாரிகள் உதவுவார்கள். சுக்கிரன் உங்களுக்கு சந்தோஷத்தை தருவார். கணவன் இடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். மனைவியின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். கன்னிப் பெண்கள் விரும்பிய இரண்டு சக்கர வண்டி வாங்கி மகிழ்வார்கள். குரு பார்வை காரணமாக கைமாத்தாக கொடுத்த பணம் வசூலாகும். கலைத்துறை, இசைத்துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வரும். வெளிநாடுகளில் நிகழ்ச்சி நடத்தும் யோகம் உள்ளது.

பரிகாரம் : சென்னை சைதாப்பேட்டை கடும்பாடி சின்னம்மனை தரிசிக்கலாம். உப்பு மிளகு பரிகாரம், சங்கு தீர்த்தம் இங்கு சிறப்பு. கண் பார்வையற்றோர், தொழுநோயாளிகளுக்கு உதவலாம்.


...................................................................................

மிதுனம்
31.8.2019 முதல் 6.9.2019 வரை
ஏழாம் இடத்தில் சனி, கேது இருவரும் தொடர்வதால் எதையாவது நினைத்து மனத்தை குழப்பிக் கொள்வீர்கள். பிள்ளைகள் படிப்பு, வேலை, திருமணம் சம்மந்தமாக கவலைப்படுவீர்கள். சூரியன் ஆட்சியாக இருப்பதால் அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும். வங்கி, இன்ஸ்யூரன்ஸ் சம்மந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும். சுக்கிரனின் பார்வை காரணமாக பெண்கள் விரும்பிய தங்க நவரத்தின ஆபரணங்கள் வாங்குவார்கள். சகோதர உறவுகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். சனி வக்கிர நிவர்த்தி அடைவதால் சொத்து சம்மந்தமாக சுமுகமான முடிவுகள் ஏற்படும்.

பரிகாரம் : பைரவருக்கு விபூதி காப்பு சாத்தி வழிபடலாம். முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வேண்டியதை வாங்கித் தரலாம்.

...................................................................................


கடகம்
31.8.2019 முதல் 6.9.2019 வரை
ராசி நாதன் சந்திரனின் சஞ்சாரம் காரணமாக மன நலம் சீராக இருக்கும். வெளிநாடு செல்ல எதிர் பார்த்த விசா செவ்வாய்க்கிழமை கிடைக்கும். செவ்வாய் தன ஸ்தானத்தில் இருப்பதால் பணப்புழக்கம் இருக்கும். புதிய செல்போன், லேப்டாப் வாங்குவீர்கள். நிலம் விஷயமாக அரசாங்கத்திடம் இருந்து உரிய அனுமதி கடிதம் கைக்கு வரும். 6ல் இருக்கும் சனி, கேது சுபயோகத்தை தருவார்கள். மகள் திருமண விஷயமாக சந்திப்புக்கள், முடிவுகள் ஏற்படும். புதிய வேலையில் சேருவதற்கான கால நேரம் வந்துள்ளது. நண்பர்களுடன் அதிக நெருக்கம், வீண் பேச்சுக்கள் வேண்டாம்.

பரிகாரம் : திருவண்ணாமலையில்  உள்ள சேஷாத்ரி சுவாமிகள், ரமணர், யோகி ராம் சுரத்குமார் ஆசிரமங்களுக்கு சென்று தியானிக்கலாம். ஏழை நோயாளிகளின் மருத்துவ செலவுக்கு உதவலாம்.

.................................................................................................................................................

சிம்மம்
31.8.2019 முதல் 6.9.2019 வரை
ராசியில் கூட்டுக் கிரக சேர்க்கை இருப்பதால் பல விதமான எண்ணங்கள். சிந்தனைகள் ஏற்படும். சூரியன் யோகத்தை தருவார். பூர்விக சொத்து சம்மந்தமாக ஒருமித்த கருத்து ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான நேரம். எதிர் கோஷ்டியினர் செயல் இழந்து போவார்கள். செவ்வாயின் பார்வை காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைவார்கள் பெண்களுக்கு தாய் வீட்டில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். தாயிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். சுக்கினிரன் பார்வை காரணமாக சுப விசேஷத்திற்கான தேதியை முடிவு செய்வீர்கள்.

பரிகாரம்: மதுரை அருகேயுள்ள மடப்புரம் பத்ர காளியம்மனை தரிசிக்கலாம். பக்தர்களுக்கு பக்தி, ஸ்லோக, பாராயண புத்தகங்கள் வாங்கி விநியோகிக்கலாம்.

.................................................................................................................................................

கன்னி
31.8.2019 முதல் 6.9.2019 வரை
யோகாதிபதி சனி வக்கிர நிவர்த்தி அடைவதால் தடைகள் நீங்கும். மகனுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர் பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. சந்திரன் சாதகமாக இருப்பதால் பெண்களால் மகிழ்ச்சி, ஆதாயம் கிடைக்கும். வியாபார சம்மந்தமான பயணங்கள் லாபகரமாக அமையும். வீடு மாற வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் வரவாய்ப்புள்ளது. தாயாரின் உடல் நலம் காரணமாக மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். தடைப்பட்டு வந்த குல தெய்வ வழிபாடுகள் நல்ல முறையில் நிறைவேறும். அதனால் மன நிறைவு மகிழ்ச்சி ஏற்பாடும்.

பரிகாரம்: சிதம்பரம் அருகேயுள்ள சீர்காழி சட்டை நாத சுவாமியை தரிசிக்கலாம். பக்தர்களுக்கு இனிப்பு வகைகளை பிரசாதமாக தரலாம்.


.................................................................................................................................................
துலாம்
31.8.2019 முதல் 6.9.2019 வரை
சனி, கேது இருவரும் 3ல் யோகத்துடன் தொடர்வதால் மதில் மேல் பூனையாக இருந்த மனநிலை மாறி தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள். அலுவலகத்தில் நீங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சொந்த பந்தங்களுடன் ஆன்மிக சுற்றுலா சென்று வழிபடுவீர்கள். லாப ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் வர வேண்டிய பணம் வசூலாகும். சங்கம், பொது அமைப்புகளில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். சுக்கிரனின் பார்வையால் சுப விசேஷங்கள் கூடி வரும். வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கான முன் ஏற்பாடுகளை செய்வீர்கள்.

பரிகாரம்: பாண்டிச்சேரி அருகேயுள்ள பஞ்சவடி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். வீட்டு வேலை செய்யும் ஏழைப் அருகேயுள்ள பெண்களுக்கு உதவலாம்.


.................................................................................................................................................

விருச்சிகம்
31.8.2019 முதல் 6.9.2019 வரை
ராசி நாதன் செவ்வாய் பத்தாம் வீட்டில் சுப பலத்துடன் இருப்பதால் தொட்டது துலங்கும். மருமகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும் செய்தி வரும். விலகி நின்ற சொந்தங்கள் நெருங்கி வந்து உறவாடுவார்கள். சூரியனின் பார்வை காரணமாக சொத்து விஷயமாக நல்ல முடிவுகள் வரும், 2ல் கேது இருப்பதால் சில விஷயங்களை விட்டுக் கொடுத்து போவது நலம் தரும். கண் சம்மந்தமாக உபாதைகள் வந்து நீங்கும். குருவின் பார்வையால் கொடுக்கல், வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான கால நேரம் வந்துள்ளது. வெளிநாடு செல்ல எதிர் பார்த்த விசா வியாழக்கிழமை கைக்கு வரும்.

பரிகாரம்: விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து வழிபடலாம். பக்தர்களுக்கு இனிப்பு கொழுக்கட்டையை பிரசாதமாக தரலாம்.


.................................................................................................................................................

தனுசு
31.8.2019 முதல் 6.9.2019 வரை
ஏழில்  ராகு தொடர்வதால் நிதானம், கவனம் தேவை. நண்பர்களுடன் உல்லாச பயணங்கள் வேண்டாம். பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பெற்று இருப்பதால் தந்தையின் உடல் நலம் சீராகும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர் பாராத பதவி, பொறுப்பு கிடைக்கும். செவ்வாய் அனுகூலமாக இருப்பதால் இழுபறியாக இருந்த நிலப்பிரச்னைகள், குத்தகை, காண்ட்ராக்ட் விவகாரங்கள் நல்ல படியாக முடியும். பெண்களுக்கு கர்ப்பப்பை, பித்தப்பைகல் சம்மந்தமான உபாதைகள் வர வாய்ப்புள்ளது. ஆன்மிக தாகம் அதிகரிக்கும். விளக்கு பூஜை, கூட்டு வழிபாடு பஜனை என்று கலந்து கொள்வீர்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமை வாராகி அம்மனுக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து வழிபடலாம். பக்தர்களுக்கு கொண்டைக் கடலை சுண்டலை பிரசமாதமாக தரலாம்.


.................................................................................................................................................
மகரம்
31.8.2019 முதல் 6.9.2019 வரை
ராசி நாதன் சனி வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளதால் மனக்குழப்பங்கள் தீரும். தெளிவாக, திடமாக முடிவெடுப்பீர்கள். குடும்பத்துடன் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களுக்கு சென்று தரிசிப்பீர்கள். குருவின் பார்வையால் எதிர் பார்த்த இடத்தில் இருந்து பணம் கைக்கு வரும். வாய் மூலம் பேசி தொழில் செய்பவர்கள் ஆதாயமடைவார்கள். வீடு கட்டுவதற்கான ஆரம்பகட்ட வேலைகளை தொடங்குவீர்கள். சூரியன், செவ்வாய் சேர்க்கை காரணமாக வாக்குவாதம், வாக்குறுதி இரண்டையும் தவிர்க்கவும். தந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பங்கு வர்த்தகத்தில் உங்கள் கணிப்பு வெற்றியடையும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்னை செய்து வழிபடலாம். கட்டிட வேலை செய்பவர்கள், பாரம் சுமப்பவர்கள், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உதவலாம்.


.................................................................................................................................................
கும்பம்
31.8.2019 முதல் 6.9.2019 வரை
ராசியை கூட்டுக்கிரகங்கள் பார்ப்பதால் எண்ணங்கள், சிந்தனைகள் அதிகரிக்கும். மகன் வேலை, திருமணம் சம்மந்தமாக கவலைப்படுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மாமனாரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கும் யோகம் உள்ளது. சனி லாப ஸ்தானத்தில் தொடர்வதால் உத்யோகத்தில் சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். உங்கள் உழைப்பிற்கும், திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். குருவின் பார்வை காரணமாக பிரச்னை, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.

சந்திராஷ்டமம்: 31.8.2019 இரவு 10.36 முதல் 2.9.2019 இரவு 1.14 வரை.
பரிகாரம்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசிக்கலாம். பக்தர்களுக்கு எலுமிச்சம் பழசாதத்தை பிரசாதமாக தரலாம்.


.................................................................................................................................................
மீனம்
31.8.2019 முதல் 6.9.2019 வரை
ராசிக்கு ஆறில் கிரக கூட்டணி இருப்பதால் நிறைகுறைகள் இருக்கும். சூரியன் பலமாக இருப்பதால் நீண்ட நாட்களாக வசூலாகாத பணத்தை அதிரடியாக வசூல் செய்வீர்கள். சகோதர உறவுகளால் சிறிய மனவருத்தங்கள் வந்து நீங்கும். சனி, கேது இருவரின் அமைப்பு காரணமாக இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது. தற்காலிகமாக வெளியூரில் வேலை ெசய்ய வேண்டிய வரும். உயர் பதவியில் இருக்கும். உறவினரின் உதவி கிடைக்கும். தள்ளிப்போய் கொண்டிருந்த குழந்தை பாக்கியம் குருவின் அருளால் கூடி வரும். மிக்ஸி, ஃபிரிட்ஜ், கிரைண்டர் போன்ற மின் சாதனங்கள் வாங்குவீர்கள்.

சந்திராஷ்டமம்: 2.9.2019 இரவு 1.15 முதல் 5.9.2019 அதிகாலை 5.01 வரை.
பரிகாரம்: சென்னை மயிலாப்பூரில் உள்ள வீரபத்திர சுவாமிக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடலாம். பக்தர்களுக்கு வெண் பொங்கலை பிரசாதமாக தரலாம்.








Comments